ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக – நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், இந்தியும் தமிழ் தான் எங்கள் உயிர் எனக் கூறி அதிர வைத்தார். அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததை அடுத்து மாற்றி சொல்லி விட்டேன் தமிழும் ஆங்கிலமும் தான் எங்கள்
�
உயிர் எனக் கூறி சமாளித்தார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க
இருக்கின்றனர். பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு,
சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர்.இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான துண்டு பிரசுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் சந்திரகுமார் ஆகியோரது படங்கள் இடம் பெற்று இருந்தது. இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறும் திமுக ஹிந்தியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதாக நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் திமுக வேட்பாளரான சந்திரகுமார்.இது
தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கப்படவில்லை என்றும், வட இந்திய வாக்காளர்களுக்கு புரிவதற்காக லக்கி கோத்தாரி என்பவர் தனிப்பட்ட முறையில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கினார் என்றும், அவர் நீண்ட காலமாக மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர் என விளக்கம் அளித்திருந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது திடீரென “இருமொழிக் கொள்கையில் திமுக உறுதியாக இருக்கிறது. இந்தியும் தமிழும் தான் எங்கள் உயிர் என்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் உஷார் படுத்த சுதாரித்துக் கொண்டு இந்தியும் ஆங்கிலமும் தான் எங்கள் உயிர் எனக் கூறி சமாளித்தார்.
