சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு வரை தாரமங்கலம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில் தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி அருகே, பணிகள் முடிந்த சாலையில், வெள்ளை கோடுகள் அமைக்கும் பணியை தொழிலாளர்கள் செய்து
வந்தனர்.இதற்காக லாரியில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி வெள்ளை பெயிண்ட்டை காய்ச்சியுள்ளனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டரில் தீ பிடித்து, லாரியின் ஒரு பக்கம் எரிந்தது. இதனால், பயந்து போன தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டபோது, கேஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன்
வெடித்துச் சிதறியது.இதைப் பார்த்து பயந்து போன தொழிலாளர்கள் அங்கிருந்து பதறியடித்து ஓடிச் சென்று உயிர் தப்பினர். இந்த சிலிண்டர் விபத்தில் தொழிலாளர்கள் அனைவரும் காயம் ஏதுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
