அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; இல்லை என்றால் 100% வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி உருவாக்கப் படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதில் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பை செயல்படுத்த மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
