சென்னையில் முற்றிலும் ஏசி வசதி கொண்ட வால்வோ, பென்ஸ் போன்ற அதி நவீன சொகுசு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எத்தனை பேருந்துகள் இயக்கப்படும், எந்த வழித்தடம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பயணிகளுக்கு விரைவில் சொகுசு
பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சென்னையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் தனியார் மினி பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில்
மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதி நவீன சொகுசு பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பயணிகளுக்கு விரைவில் சொகுசு பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முற்றிலும் ஏசி வசதி கொண்ட வால்வோ, பென்ஸ் போன்ற அதி நவீன சொகுசு பேருந்துகளை இயக்க சென்னை
மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தனியார் மூலமாக இந்த பேருந்துகள் இயக்குவதற்கான சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் முன்மொழிவிற்கு போக்குவரத்து துறையும் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிட்டப்படுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் மட்டும் தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று
சொல்லபடுகிறது. என்னென்ன வசதிகள் உள்ளன இந்த சொகுசு பேருந்துகளில் இலவச வைபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், விசாலமான இருக்கைகள், போதுமான அளவுக்கு கால் வைக்கும் இடங்கள், ஏசி வசதிகள், இரைச்சல் இல்லாத தன்மை, நவீன ஜன்னல்கள் ஆகிய வசதிகள் இருக்கும். சென்னையில் அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இந்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தனியார் பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகத்தின் டெப்போக்கள், பேருந்து நிலையங்கள், பார்க்கிங் ஸ்லாட்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகளை கட்டணம் அடிப்படையில்
பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அதேபோல வருவாயில் ஒரு கணிசமான பங்கை மாநகர போக்குவரத்து கழகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும், எந்தெந்த ரூட்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது சென்னையில் இயக்கப்பட்டுவரும் மாநகர ஏசி பேருந்துகளை விட, இந்த தனியார் சொகுசு ஏசி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் இருக்கும் எனவும் அதிக கட்டணம் செலுத்ததயாராக இருக்கும் பயணிகளை இலக்காக கொண்டு இந்த சொகுசு மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழக சார்பில் தற்போது 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 629 ரூட்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 32 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
