A-Z “Clean Sri lanka” பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

images-3-11.jpeg

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்று(29) நாராஹன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான இட ஒதுக்கீடு, பிரதேச சபைகளின் எதிர்கால அபிவிருத்தி திட்டம் சமூக வலுவூட்டல் திட்டங்கள் மற்றும் “Clean Sri lanka” திட்டத்தை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

மஹரகம மற்றும் கஸ்பாவ எல்லைகளில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வு காணல் கொழும்பு பிரதான பஸ்தரிப்பிடத்தில் உள்ள அசுத்தமான தன்மையை உடனடியாக நீக்குதல் மற்றும் சீத்தாவக்கை நிரிபொல வயல் நிலங்களில் பாதுகாப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுவதனை நிறுத்துதல் உட்பட்ட காரணங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

“மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்த பிரச்சினைகள் காரணமாக எதிர்பார்த்த மாற்றத்திற்காக கடந்த தேர்தலின் போது அவர்கள் வாக்குகளை பயன்படுத்தினர்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் என்றவகையில் எங்களிற்கு பொறுப்பு இருக்கின்றது.

Clean Sri Lanka திட்டம் என்பது சுற்றுச் சூழலை சுத்தம் செய்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அல்லது கொள்கைகளை செயற்படுத்துவது மட்டுமல்ல நடத்தை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் நற் பண்புகளை ஏற்படுத்தவும் வேண்டும்.

Clean Sri Lanka ஊடாக எதிர்பார்க்கப்படுவது அனைத்து பிரிவுகளிலும் மறுசீரமைப்பினை ஏற்படுதுதல் ஆகும். அதற்காக மக்களிற்கிடையில் உரையாடல்கள் ஏற்பட வேண்டும்.

நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் என்ன என்பது பற்றி நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மக்களிற்கு தரமான சேவையை உணர்வுபூர்வமாக வழங்குங்கள். சேவைகள் பற்றி மக்கள் திருப்தியடைவதே முக்கியமானது. இது சுற்று நிருபங்களை வெளியிட்டு செயற்படுத்த வேண்டிய ஒன்று அல்ல” என பிரதமர் மேலும் கருத்து தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *