வலசைப் பறவைகள் வருகை!மட்டக்களப்பு கல்முனை

475306330_936858065258562_3907870749532012852_n.jpg

மட்டக்களப்பு – குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் வலசைப் பறவைகள் வருகை!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன.

அதில் Australian White Ibis என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதாகவும் மக்கள் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *