ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கு நெருக்கடி அமெரிக்க

download-66.jpeg

மெரிக்காவுடன் அதிக அளவில் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர் விமானங்கள், போர் வாகனங்கள் முதல் ஏரோ-என்ஜின்கள் மற்றும் ஏவுகணைகள் வரை பலவற்றை இந்தியாவிடம் விற்க டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறதாம்.$25 பில்லியனுக்கும் அதிகமாக அமெரிக்காவிடம்

இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று டிரம்ப் நெருக்கடி தந்து வருகிறாராம். சமீபத்தில்தான் இந்தியா அமெரிக்க அரசாங்கத்துடன் 31 ஆயுதமேந்திய MQ-9B ‘பிரிடேட்டர்’ ரிமோட் பைலட் விமானங்களுக்கான மெகா $3.3 பில்லியன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.அதன்பின் ட்ரோன் வாங்குவதற்கான $520 மில்லியன் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டது. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் இருந்து

கூடுதல் ராணுவ பொருட்களை இந்தியா வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இறங்கி வரும் இந்தியா: இது போக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில உயர்தரப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எஃகு, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம். இத்தகைய நடவடிக்கை காரணமாக உள்நாட்டுத் தொழில்களில் பெரிய தாக்கம் ஏற்பட

வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது உறுதிப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து 20 பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது, அவற்றிற்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இந்தியா குறைக்க உள்ளது.அமெரிக்காவிற்கு வரி மூலமாக அழுத்தம்

கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த எச்சரிக்கையை டிரம்ப் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அதிக வரி விதிக்கும் நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம், இந்த நாடுகள்

பொதுவாக எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்றாலும்.. தங்களுக்கு தேவையான, தங்கள் நாட்டிற்கு தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் நாங்களும்.. பிற நாடுகளுக்கு முக்கியமாக

எங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடுகளுக்கு நாங்களும் கூடுதல் வரிகளை விதிப்போம்.மற்ற நாடுகள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சீனா ஒரு மிகப்பெரிய நாடு.. அவர்கள் மற்ற நாடுகள் மீது மிக மிக அதிக அளவில் வரியை விதிக்கிறார்கள். இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகள் இதேபோல் கூடுதல் வரியை விதிக்கிறார்கள். எனவே அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க நாமும் இனி வரி விதிக்க வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *