புனித அல்குர்ஆனை எரித்து வன்முறைப் தூண்டிய ஒருவர் சுவீடனில் சுட்டுக்

download-10-22.jpeg

புனித அல்குர்ஆனை எரித்து வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிய ஒருவர் சுவீடனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 வயதான சல்வான் மோமிகா என்பவரே புதன்கிழமை (29) மாலை ஸ்டாக்ஹோமில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மோமிக் 2023 இல் ஸ்டாக்ஹோம் மத்திய பள்ளிவாசலுக்கு வெளியே புனித அல்குர்ஆன பிரதியை தீ வைத்து எரித்ததை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இரவோடு இரவாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து ஐவர் கைது செய்யப்பட்டதாக ஸ்டாக்ஹோம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் வசிக்கும் ஈராக்கியரான மோமிகா, 2023 ஆம் ஆண்டிலும் நான்கு சந்தர்ப்பங்களில் “ஓர் இனக்குழுவுக கு எதிராக கிளர்ச்சி” செய்ததாக ஆகஸ்ட் மாதம் குற்றம் சாட்டப்பட்டார்.

இதன்படி இன்று (30) வியாழனன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு, “பிரதிவாதிகளில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து” ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மோமிகா இஸ்லாத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார், இது பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சீற்றத்தைத் தூண்டியது.

பக்தாத்தில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் இரண்டு முறை அமைதியின்மை ஏற்பட்டது, அதே நேரத்தில் சுவிஷ் தூதர் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *