சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு அல்லது வேறு எங்கும் கொண்டு செல்லலாமா

images-43.jpeg

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலதிக சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு அல்லது வேறு எங்கும் கொண்டு செல்லலாமா என்பது குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. .

பல அரசியல் தலைவர்கள் அவரது உடல் நிலை தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று குடும்பத்தாரிடம் கேட்டறிந்து கொள்கின்றனர்.

இந்தநிலையில், அங்கு சென்ற சில அரசியல்வாதி ஒருவருடன் மாவை சேனாதிராஜாவின் சகோதரி சகோதரி முரண்பட்டதாகவும், அவரை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
குறித்த அரசியல்வாதி, மாவை சேனாதிராஜாவுக்கு எதிரான அணியில் தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ள நிலையில், அவரைப் பார்த்து மாவையின் சகோதரி பதவி ஆசைப் பிடித்தவர் என்று கடுமையான தொனியில் திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை குளியலைறைக்குச் செல்லும் போது கீழே தவறி விழுந்த மாவை சேனாதிராஜா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது.தற்போது வரை அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், பல அரசியல் தலைவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று குடும்பத்தாரிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சுமந்திரன் ஆகியோர் மாவையை நேரில் சென்று பார்வையிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் நேரில் சென்று பார்வையிட்டனர். இதேவேளை, மாவை சேனாதிராஜாவின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையன் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் தொலைபேசியின் வாயிலாக உரையாடியதாகவும், மேலதிக சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு அல்லது வேறு எங்கும் கொண்டு செல்லலாமா என்பது குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *