திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை துரத்திச் சென்ற
சென்னை அருகே பெண்கள் சிலர் குடும்பமாக காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரை தடுத்து நிறுத்திய திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், தங்கள் காரின் கதவை அடித்து எதிர் காரில் இருந்தோரை (பெண்களை) மிரட்டி உள்ளனர். அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிச் செல்ல நினைத்த எதிர் காரில் இருந்த பெண்கள், அவர்களின் காரை ரிவர்ஸ் எடுத்தபடி நீண்ட தூரம் சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்கள், அப்பெண்களின் காரை ஒரு இடத்தில் வழிமறித்து அவர்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக, இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது? அந்த
பெண்களுக்கு என்ன ஆனது? காரில் விரட்டிய நபர்கள் யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.அந்த விசாரணையின் முடிவில் இந்தச் சம்பவம் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கானத்தூர் (செங்கல்பட்டு) பகுதியைச் சேர்ந்த சின்னி திலாங் (32) என்பவர் தனது குடும்பத்தோடு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.திமுக கொடியுடன் உள்ள காரில் சென்ற இளைஞர்கள், பெண்களை அச்சுறுத்திய காட்சி
தனது புகாரில் சின்னி திலாங், “கடந்த 25- ஆம் தேதி இரவு எனது குடும்பத்தோடு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் அடுத்த முட்டுக்காடு பாலம் அருகே காரில் சென்ற போது சஃபாரி காரில் வந்த இளைஞர்கள் சிலர் எங்களை துரத்தி வந்தனர். அவர்கள் எங்களை தாக்கினர். அவர்கள் அஜாக்கிரதையாக ஒரு காரில் வந்த நிலையில், அந்த காரில் இருந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர். அதனால் நாங்கள் கிளம்ப முற்பட்டோம்.இருப்பினும் சஃபாரி காரில் வந்த 7, 8 இளைஞர்கள் எங்களை
துரத்தி, எங்களது வாகனத்தை தாக்கினர். வீடு வரை பின்தொடர்ந்து வந்து மிரட்டிச் சென்றனர். முட்டுக்காடு பாலத்தில் இருந்து எங்களது வீடு வரை துரத்தி வந்து எங்களை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கானத்தூர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.கானத்தூர் போலீசார் விசாரணை
புகாரின் பேரில் வீடியோ காட்சி பதிவுகளை கைப்பற்றி கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்து நெடுஞ்சாலையின் குறுக்காக காரை நிறுத்தி பெண்களிடம் பிரச்சனையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
