அறுவை சிகிச்சைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது.

download-5-35.jpeg

அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (28) முதன்முறையாகக் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதி நிர்வாக சபை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடி இருந்தனர்.

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்கான திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒரு தீர்வாக அலுவலக நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகள் செய்வது குறித்தும், அவற்றைச் செய்யும் வைத்தியர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *