கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் பலி

download-8-22.jpeg

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் அங்கு புனித நீராடல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது புனித நீராடல் மீண்டும் தொடங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கியது. இது பெப்ரவரி 26ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்கு நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்த மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தை அமாவாசை என்பதால் புனித நீராட திரிவேணி சங்கமத்திற்கு இன்று ஒரே நாளில் 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதிகாலை முதலே கும்பமேளாவில் நீராடல் இடத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர். பொலிசாரும் கடந்த சில தினங்களாக 4 சக்கர வாகனங்கள் கும்பமேளா நடக்கும் இடத்திற்கே வர தடை விதித்திருந்தனர். இரு சக்கர வாகனங்கள் கூட யாராவது வயதானவர்களை அழைத்து வந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தை அமாவாசை என்பதால் ஏராளமானோர் புனித நீராட வந்தனர். அப்போது பொலிசார் எத்தனை முறை எச்சரித்தாலும், அப்போது மக்கள் முந்தி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து பல சாதுக்கள் தாங்கள் இன்று நீராட போவதில்லை என முடிவு செய்து அறிவித்தனர். பக்தர்களின் நலன் கருதி நாங்கள் நீராட மாட்டோம் என்றனர். எனினும் சில சாதுக்கள் நீராடினர். இந்த நிலையில் கூட்ட நெரிசலால் புனித நீராடலுக்கு தடை விதிக்கப்பட்டது.

பக்தர்கள் யாரும் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து நிலைமை கட்டுக்குள் வந்ததும் புனித நீராடல் மீண்டும் தொடங்கியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *