ராமேஸ்வரத்தில், பெண் பக்தர்கள் உடை மாற்றும் கூடத்தில் ரகசிய கேமரா பொருத்திய இருவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.புனிததலமாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு , தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று தரிசிப்பார்கள்.. அப்போது, அங்குள்ள
தீர்த்தக்கிணறுகளிலும் நீராடிவிட்டு வருவது பக்தர்களின் வழக்கமாகும். இதற்காக வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு வருவார்கள் அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்பத்தினர் கடந்த மாதம் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர்.. சாமி தரிசனம் முடிந்ததும், அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள்.. பிறகு, கடற்கரைக்கு எதிரிலேயே உடை மாற்றும் அறை இருந்துள்ளது.. இது டீக்கடையுடன் சேர்த்து, துணி மாற்றுவதற்கென்றே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் உடை
மாற்றுவதற்கென்று கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை குடும்பத்தில் இருந்த இளம்பெண்கள், வயதான பெண்கள் டீ கடைக்கு சென்றுள்ளனர்.. அங்கிருந்த டீ மாஸ்டர், துணி மாற்றும் அறைக்கு செல்லுமாறு சொல்லியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த ஒரு பெண், அந்த அறையிலிருந்த சுவரை நன்றாக கவனித்திருக்கிறார்… அப்போது கருப்பு நிற டைல்ஸ் கற்களுக்கு நவில், கேமரா
ஒன்று பொருத்தப்பட்டிருந்ததை கவனித்து அதிர்ச்சி அடைந்தார்.ருப்பு டைல்ஸுடன், கருப்பு கேமரா என்பதால், டக்கென யாருக்கும் தெரியவில்லை. இந்த பெண், கேமராவை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.. பிறகு, கேமராவையும் கையோடு கைப்பற்றி, தன்னுடைய அப்பாவிடம் தந்தார். இதற்கு பிறகு, ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் பறந்தது.உடை மாற்ற வரும் பெண்களை ரகசியமாக படம் பிடிக்க வைத்திருந்த டீக்கடை ஓனர் ராஜேஷ்கண்ணா என்பவரையும், அந்த கடையின் டீ மாஸ்டர் மீரான்மைதீன் என்பவரையும் கைது செய்தனர். இருவருக்குமே 37
வயதாகிறது.. இவர்களிடம் நடத்திய விசாரணையில், கருபபு நிற கேமராவை ஆன்லைனிலேயே தேடி வாங்கினார்களாம். அந்த கேமராவில் ஏராளமான பெண்களின் உடைமாற்றும் காட்சியும் பதிவாகியிருந்தது. உடை மாற்றும் அறை: அங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது
விசாரணையில் தெரியவந்தது. இதனால் காவல்துறை மட்டுமல்லாமல், பக்தர்கள் மத்தியிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் உடனடியாக, அனைத்து உடை மாற்றும் கூடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ முன்னிலையில் போலீசார், ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த டீக்கடையுடன் கூடிய அறை மற்றும் கடைக்கு சீல் வைத்தனர்.
