ரணில் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது தலதா அத்துகோரள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.
நாங்கள் இரண்டு தரப்பினரும் பிரிந்து செயற்பட ஆரம்பித்ததாலே தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிக்கு வர முடியுமாகி இருக்கிறது.
அதனால் எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருந்து வருகிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூரட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் குறி்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையை பயன்படுத்திக்கொண்டு நினைத்த பிரகாரம் செயற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.
கூட்டுறவு சங்க தேர்தல்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட ஆரம்பித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் தோல்வியடைய ஆரம்பித்திருக்கிறது.
