தலைவர் முஷாரப் முயற்சியில் கட்டுமான பணிகள் நிறைவு.

474948031_934744012136634_6931929375815561677_n.jpg

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் கட்டுமான பணிகள் நிறைவு.

தற்போது சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் 3 ஆம் மாடி கட்டிட நிர்மான பணி முன்னால் இராஜாங்க அமைச்சரும்,புதிய தலைமுறை கழகத்தின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபின் முயற்சியில் 20 இலட்சம் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் பதில் தவிசாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.எம். மஜீதின் விசேட அழைப்பினை ஏற்று அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் அஸாம் அப்துல் அஸீஸ் குறைகளைக் கேட்டரிந்த பின்னர் அவரது முயற்சியில் முன்னால் இராஜாங்க அமைச்சர், புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் நிதியுதவில் சுமார் 20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஒதுக்கப்பட்டு மீதி பணம் மெர்சி லங்கா நிறுனவத்தின் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் துரிதமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது!

கடந்த நான்கு ஆண்டுகளில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, அரசியல் ஆட்சி மாற்றம் என்பன இயக்கச்சமன்பாட்டை நிலைகுலையச் செய்தது இருந்தபோதிலும், முன்னால் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி தீர்வுகளை நோக்கி வினைத்திறனாக செயற்பட்டு வெற்றியும் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஹம்மத் மர்ஷாத்-

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *