எதிர்கால சந்ததியினர் பார்வைக்காக ராஜபக்ஷாவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
விடுதலைப் புலிகள் அல்லாது பொதுமக்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்து இருக்கிறார் பல ஊடவியலாளர்கள் மற்றும் வெள்ளை வேன் கடத்தல் யுத்தம் முடிவுக்கு வரும் பொழுது ராணுவத்திடம் உயிருடன் ஒப்படைத்தவர்கள் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை ராஜபக்ச அவர்களை அதற்காகவா அவரின் உடலை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற நபராக மாறினார்.
எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போன்ற மஹிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ராஜபக்ச கூறினார்