76 ஆவது குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின்

images-32.jpeg

76 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி

ஏற்றுக்கொண்டார். குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெற்றது.76 ஆவது குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பிற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த 20, 22, 24 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3 அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.குடியரசு தினமான இன்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முப்படை வீரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்களும் நடைபெற்று வருகின்றது

இன்றயை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பதக்கம், வேளாண்மை விருது, காந்தியடிகள் காவலர்கள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.செய்திதுறை சார்பாக மங்கள இசை, காவல்துறை, பள்ளிகல்வித்துறை, பொதுதேர்தல் துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலங்கார அணிவகுப்பு ஊர்திகளும் பங்கேற்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *