தந்தை பெரியார் ஒரு சீர்திருத்தவாதி இல்லை. உன் கணவன் நீ இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தால் நீயும் உன் கணவரைப் போல விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி சமூகத்தைச் சீரழித்தவர்தான் பெரியார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீரமாமுனிவர், பெஸ்கி, ஜியு போப் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் முட்டாள்களின் பாஷை; தமிழ் காட்டுமிராண்டி மொழி; தமிழ் தமிழர் என்று பேசுகிறவன் தாய்ப்பால் பைத்தியம்; பித்தலாட்டக்காரன்; தமிழில் என்ன சனியன் இருக்கிறது? தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக் கூட தகுதி இல்லை; 3,000 ஆண்டுகளாக இருக்கும் தமிழ்த் தாய் உன்னை படிக்க வைத்தாளா? எனப் பேசவில்லை.பெண்களை பிற ஆண்களுடன் உறவு வைக்க சொன்னவர் பெரியார் சமூகத்தை சீரழித்தவர்தான் பெரியார்; அவர்
சீர்திருத்தவாதி இல்லை. வாங்க என்னுடன் வாதிடுங்கள். உன் கணவன் நீ இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தால் நீயும் உன் கணவரைப் போல விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி பெரியார் சீர்திருத்தவாதியா? சமூகத்தைச் சீரழித்தவர்தான் பெரியார். பிடிக்காத ஆண் மகனுடன் வாழாமல் மண முறிவு பெற்று பிடித்த ஆண் மகனுடன் இணைந்து வாழ் என்பதுதான் சீர்திருத்தம். பெரியார் சொன்னது சீரழிவுதான். கணவர் இல்லாமல் வேறு ஆணுடன்
�
பெண்கள் உறவு வைத்துக் கொள்வதை குற்றமாகக் கருதக் கூடாது என்று 1971-ம் ஆண்டு சேலத்தில் 3-வது தீர்மானமாகப் போட்டவர்தான் உங்கள் தந்தை பெரியார். எனக்கு தேசாபிமானம் இல்லை; மொழி அபிமானம் இல்லை; எனக்கு இன அபிமானம் இல்லை. என்று சொல்லிவிட்டு திராவிட நாடு என கேட்டவர் பெரியார்.. அப்ப திராவிட நாடு என்பது என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.
