வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில்

download-1-34.jpeg

132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பண மோசடிகள்
சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் அது 4,658 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.கடந்த ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் மோசடியாளகள் தொடர்பில் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *