பிரபாகரன் அவர்களைப் பற்றி கிண்டல் கேலியாக சீமான் பேசிய ஆடியோ

download-1-33.jpeg

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேசியது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் அவர்களைப் பற்றி கிண்டல் கேலியாக சீமான் பேசிய ஆடியோ தன்னிடம்

இருக்கிறது என பரபரப்பாக பேசிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக நேற்று பெண் செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்ப, கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் சில வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக பேசினார். இதற்கு பல பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பிரபாகரன் அவர்களைப் பற்றி கிண்டல் கேலியாக சீமான் பேசிய ஆடியோ தன்னிடம் இருக்கிறது என பரபரப்பாக பேசிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி .இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பேசியுள்ள அவர்,” மேதகு பிரபாகரன் அவர்களின் சகோதரனின் மகனை பிரபாகரன் சீமான் எவ்வளவு கேவலமாக பேசினார் என்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீங்க.. சீமானுக்கு கோபம் வந்தால் பிரபாகரனின் உருவத்தை கேலி பண்ணும் விதமாக குண்டு மகன் குண்டு மகன் அப்படின்னு தான் என்கிட்ட கேவலமா பேசுவாரு..அந்த மாதிரி சீமான் என்கிட்ட பேசின பல ஆடியோக்களை

வைத்து 2011ல் அதிமுக காலகட்டத்தில் சீமான் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தேன் இல்லையா.. அப்போ தலைவர் பிரபாகரனை எவ்வளவு கொச்சையா பேசி இருக்காரு அந்த ஆடியோக்களை கூட நான் காவல்துறை கிட்ட காட்டினேன். அவங்களுக்கே ஆச்சரியமாய் போச்சு.. ஆனால் அதுக்கப்புறம் வந்து அந்த வழக்கை சீமான் நடத்த விடவில்லை.. எனக்கும் நிறைய அச்சுறுத்தல் கொடுத்து, அந்த கேச வாபஸ் வாங்க வேண்டியதா போச்சு..அந்த போன் அப்படியே காவல்துறையிடம் மாட்டிக்கிச்சு.. இன்னைக்கு அந்த போன் என்கிட்ட இருந்துச்சுன்னா உலகமே வந்து ஷாக் ஆகுறபடி நிறைய ஆடியோஸ் வந்து சீமான் தலைவர் பிரபாகரனை பத்தி கொச்சையா பேசுனத காட்டியிருப்பேன்.. இன்னைக்கு நான் பேசியிருக்க விஷயத்தை போய் சீமான் கிட்ட கேளுங்க ஆதாரத்தை காட்ட சொல்லுங்க.. ஆதாரத்தை காட்ட சொல்லுங்க.. அப்படின்னு சிரிச்சிட்டு போவார். சீமான் கிட்ட நான் சொல்றேன்.. நேத்து மீடியா முன்னாடி சொன்னார் இல்லையா என் மகனுக்கு வந்து தலைவர் பிரபாகரன் தான் பெரியப்பா அப்படின்னு.. அந்த குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க சீமான்

தலைவர் பிரபாகரனை நீங்க பாடி ஷேமிங் பண்ற விதமா குண்டு மகன் குண்டு மகன் அப்படின்னு சொன்னதே கிடையாதுனு சத்தியம் பண்ணி சொல்லுங்க.. நான் கும்பிடுற சிவபெருமான் மேல சத்தியமா நான் சொல்லுவேன்.. இதே காது பிரபாகரன் குறித்து அவதூறாக பேசியதை கேட்டிருக்கு.. இன்னைக்கு நான் தமிழ்நாடு மக்களிடம் ஒரே ஒரு விண்ணப்பத்தை தான் வைப்பேன்.. சீமானுக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணனும்னு எந்த எண்ணமும் கிடையாது. அரசை துன்புறுத்திக்கிட்டு, மக்களை ஏமாற்றிவிட்டு, தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்தி விட்டு, சீமானுக்கு இருக்கிற ஒரே நோக்கம் பணம் பார்ப்பது மட்டும்தான். எல்லாரையும் கொச்சைப்படுத்திட்டு இன்னைக்கு வந்து தமிழ் பொண்ணு அவரோட சுயநலத்திற்கு என்னால தமிழ் மக்களோட வாழ விடாமல் கர்நாடகாவில் துன்பப்படுது நீங்க பாத்துட்டு தான் இருக்கீங்க

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *