4 பெண் பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்கட்டமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி மூன்று பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
தற்போது, இன்று(ஜன.25) மேலும் நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. விடுவிக்கப்பட்டவர்கள் தற்போது இஸ்ரேலுக்கு திரும்புகின்றனர் .
இவர்கள் நால்வரும் இஸ்ரேலிய ராணுவத்தினர் ஆவர்.
