நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை
வங்கதேசத்துக்கு ஐ.எஸ்.ஐ.அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பியதை அடுத்து, நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.பாகிஸ்தானுடன் வங்கதேசத்தின் நெருக்கமான உறவுகள் இந்தியாவை கவலையடையச் செய்கின்றன.
