செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பெரியாரை விமர்சித்து வருகிறார். இவருக்கு பெரியாரிய ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும், அவரின் முற்றுகையிட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.
வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார்.
அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
