கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180

25-679349288edfa.jpeg

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதிபர் திருமதி.வனித்தா தியாகராஜா தெரிவித்தார் .

வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நேற்றுமாலை வெளியாயிருந்தமை

குறிப்பிடத்தக்கது.  இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *