மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தெலங்கானாவில் மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த கொடூர கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர், மீர்பெட் நகரில் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்குள் சண்டை நிலவிவந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி முதல் மாதவி மாயமாகியுள்ளார்.இதுதொடர்பான புகாரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சண்டையின் போது மாதவியை கொன்ற குருமூர்த்தி, அவரது உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, அதனை குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியது தெரியவந்தது. குருமூர்த்தியை கைது செய்த காவல்துறையினர், குளத்தில் வீசப்பட்ட மாதவியின் உடல்பாகங்களை தேடி வருகின்றனர்.
