மாவடிப்பள்ளி குளக்கட்டு வீதி முற்றாக சேதம்

பருவ மழை காரணமாக மாவடிப்பள்ளி குளக்கட்டு வீதி முற்றாக சேதம்! விவசாயிகள் பெரும் அவதி.

பருவ மழையை எதிர்நோக்கி நீர் வழித்தடங்களைத் தூர்வாருவதற்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப்பணிகள் மூலம் மழை நீர் வெளியேறி வருவதைப் பகுதிவாரியாக ஆய்வு செய்து வருகிறோம்.
அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்பட்ட சாய்ந்தமருது- மாவடிப்பள்ளியை ஊடறுக்கும் குருநல் கஞ்சி ஆறு சாய்ந்தமருது துரிசி கட்டு அருகில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாக குளக்கட்டு

அண்மித்த வீதி இரண்டாகப் பிளந்து சிதைவடைந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதை உடைப்பெடுத்து நீர்வடிந்தோடுவதனால் போக்குவரத்தும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது,இதன் காரணமாக அருகிலுள்ள வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக கவனிப்பாரற்று காணப்படும் இவ்வீதி மழை மற்றும் நீர்

பெருக்கெடுக்கும் காலங்களில் இவ்வாறு சிதைவடைவதால் பொதுமக்களும் விவசாயிகளும் தொடரந்து பாதிக்கப்பட்டே வருகின்றனர்.
குறித்த வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான நீர் வடிந்து ஓடக்கூடிய குழாய்கள் பாதையில் பொருத்தி புனரமைத்து தருமாறு அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். முஹம்மத் மர்ஷாத்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *