இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற ஒருவர் கைது

download-10-18.jpeg

அதிகாரி ஒருவர் கைது இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற தொழில் திணைக்களத்தின், கொழும்பு மேற்கு மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று 22 பிற்பகல் கல்கிஸை, காலி வீதி, டெம்பள்ஸ் வீதி சந்திக்கு அருகில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளர் நடத்திவரும் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை ஐந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டுமெனவும், அவ்வாறு அதிகரிக்கும் தொகைக்கு ஏற்ப ஊழியர் சேமலாப நிதியை செலுத்த வேண்டுமெனவும், இந்த நிறுவனம் தொடர்பில் முந்தைய தவறுகள் காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் உயர் அதிகாரிக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் விசாரணை நோக்கங்களுக்காக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பிக் கொடுப்பதற்காகவும் இவ்வாறு இலஞ்சப் பணம் பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *