வெள்ளத் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
பொத்துவிலில் இன்று காலை கடும் மழையுடன் மின்னல், இடிமுழக்கம் நிலவிக் கொண்டிருப்பதனால் பாடசாலைகளில் வெள்ளத் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் வரவு நிலை குறைந்துள்ளது.
மேலும் தரம் 6 – 13 வரையான இடைநிலை வகுப்புகளுக்கான பரீட்சைகளும், தரம் – 4,
தரம் 5 மாணவர்களுக்குரிய மாகாண கல்வித் திணைக்களத்தின் பரிகார கற்பித்தலின் இறுதிக் கணிப்பீடும் திட்டமிட்டபடி பொத்துவில் பாடசாலைகளில் சிறப்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே. ஹம்சா தலைமையில் நடந்து கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
�
இன்றைய பாடசாலைகளின் கல நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை செய்வதற்காக வேண்டி பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே. ஹம்சா அவர்களும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம். ஜெமில் அவர்களும் முச்சக்கரவண்டியில் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் மழை பெய்து வருமாக இருந்தால் மக்கள் பெரும் இன்னல்களுக்குள் உள்வாங்கப்படலாம்.
