இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழைக்காரணமாக மத்திய ஜாவா தீவில் உள்ள பெக்கலோங்கன் பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்சரிவும் ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் முழுவதும் மண், பாறைகளால் நிரம்பின.மண்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
