4 பேர் கொல்லப்பட்டனர் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் குற்றவாளிகள் கும்பலுக்கு இடையே என்கவுன்டர் நடந்தது. இந்த நிகழ்வு, குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சி செய்ததால், நடந்துள்ளது. அப்போது குற்றவாளிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.
ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயிரிழந்த குற்றவாளிகளில் மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அர்ஷத் சஹரன்பூரைச் சேர்ந்தவர், மஞ்சீத் சோனிபட்டைச் சேர்ந்தவர், சதீஷ் கர்னாலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு குற்றவாளியின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
