தனது நிர்வாகம் உறுதியாக பின்பற்றும் என்றும் டிரம்ப் பேசினார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், தனது முதல் உரையில் அதிரடியான அறிவிப்புகளால் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். வெளிநாடுகள் மீது கூடுதல் வரி, பனாமா கால்வாய் மீட்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் போன்ற பேச்சுகள், சர்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றவுடன் டிரம்ப்
�
உரையாற்றினார். அப்போது, பொற்காலம் தொடங்கிவிட்டதாக தெரிவித்த டிரம்ப், எல்லை விவகாரம், இயற்கைப் பேரிடர்கள், வெளிநாட்டு கொள்கைகள் என பலவற்றிலும் பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை தனது நிர்வாகம் உறுதியாக பின்பற்றும் என்றும் டிரம்ப் பேசினார்.
டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படுவதாகவும், இதன்மூலம் சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல் தடுக்கப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய லட்சக்கணக்கானோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என்றும், சட்டத்துக்கு உட்படாத சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நிற அ
�
டிப்படையிலான தீண்டாமை இல்லாத சமுதாயம் உருவாக்கப்படும் என்று கூறிய டிரம்ப், ஆண்-பெண் என்ற இரு பாலினத்தவருக்கே அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார் அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக்கும் பொறுப்புக்காகவே துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருந்து இறைவன் தன்னை காப்பாற்றியதாக டிரம்ப் உருக்கமுடன் கூறினார். சீனாவின் நிர்வாகத்தில் உள்ள பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவுடன் இணைப்பேன் என்று தடாலடியாக அறிவித்த அதிபர், போர்கள் இனி இருக்காது என்றும் உலகில் அமைதியை ஏற்படுத்துபவராக தான் அறியப்பட விரும்புவதாகவும் கூறினார்.
