றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு.

download-10-16.jpeg

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் ஞாயிற்றுக்கிழமை. 09/01/2025. மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கல்வி பொதுத்தர சாதாரணதரம் சித்தி பெற்ற நிலையில் மரத்தால் விழுந்து பாரிய உபாதைகளுக்குபட்பட்ட மாணவன் ஒருவருக்குரிய பலவிதமான மருத்துவ உபகரணங்களை றொட்டறிக் கழகத்தினர் இதன்போது வழங்கி வைத்தனர்.
மேலும் எதிர்காலத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தமது றெட்டறிக்

கழகத்தினால் மேலும் பல உதவிகளை மெற்கொள்ளவுள்ளதாக இதன்போது றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு தலைவர் ம.ஜெகவண்ணன் தெரிவித்தார்.
தாம் மருத்துவத் துறையிலிருந்து அரசியலுக்குள் சென்றாலும் றெட்டறிக் கழகத்துடன் இணைந்து இம்மாவட்டத்தில் மருத்துவத்துறை சார்ந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவநேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், றொட்டறிக் கழகத்தின் மட்டக்களப்பு தலைவர் ம.ஜெகவண்ணன், மற்றும் றெட்டறிக் கழகத்தின் சுவீடன் நாட்டுக் கிளையின் பிரதிநிதிகள், சத்திரகிசிச்சை நிபுணர் வைத்தியர் பாமதி, மகப்பேற்று வைத்திய நிபுணர் வசந்தராஜா, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *