விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை பரந்தூரில் மக்களை தவெக தலைவர் விஜய், இன்று நேரில் சந்தித்தார். மக்களை சந்தித்து அவர் பேசுகையில், “விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது. விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே நான்
கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.இதே கருத்தை கடந்த காலங்களிலும் சில அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள், வேறு சில இடங்களையும் பரிந்துரை செய்தனர். அப்படியான சில இடங்கள் குறித்தும், அதை முன்வைத்தவர்கள் யார் யார், ஏன் அதை முன்வைத்தனர் என்பது குறித்தும் பார்க்கலாம். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், பட்டாளம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் ஆகிய நான்கு இடங்களைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. அனைத்து
�
இடங்களிலும் ஆய்வு செய்த பின்னரே பரந்தூரை அரசு முன்மொழிந்தது. ஆக. 1, 2022-ல் திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் விமான நிலையம் வருவதை உறுதிசெய்திருந்தார். இதையடுத்து பரந்தூர் மக்களிடம் நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை அப்பகுதி மக்கள் எதிர்க்க தொடங்கினர். தொடர்ந்து அரசியல் கட்சியினரும் நிலம் கையகப்படுத்தலை
�
எதிர்த்து பல்வேறு வகையில் போராடினர். அதில் சிலர், அரசு பரிந்துரைத்த வேறு இடங்களில் விமான நிலையத்தை அமைக்க பரிந்துரையும் செய்தனர். அந்தவகையில் ஆகஸ்ட் 2022-ல், பரந்தூர் விமான நிலையம் வருமென அறிவிக்கப்பட்டபோதே பாமக தலைவர் அன்புமணி ஒரு மாற்று முடிவை முன்வைத்தார். அவர் சொன்ன இடம், உப்பளம். கடந்த ஆகஸ்ட் 25, 2022-ல் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை பா.ம.க சார்பில் நடத்தினார்.
