ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை கனகச்சிதமாக போய்க்கொண்டிருக்கிறது ஜனாதிபதி அநுர
சந்தேகப்படவேண்டாம், அச்சப்படவேண்டாம், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை கதகச்சிதமாக போய்க்கொண்டிருக்கிறது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று 19. களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் நாங்கள் உங்களை சந்திக்க எதிர்பார்த்தோம். ஆனால், பொருளாதார ரீதியாக ஓரளவு நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் உங்களை வந்து சந்திக்க முடிவெடுத்தோம். எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.
எமது வெற்றி மக்களின் கரங்களிலேயே உள்ளது. ஆட்சியை கொண்டு வந்துருக்கிறீர்கள். ஆட்சியை கவிழ்த்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும் ஆட்சியை கைப்பற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்ற சூழ்ச்சிகளும் நம் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. பயப்பட வேண்டாம்! அதுபற்றிய விசாரணை மிகச் சரியாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னர் ஆட்சியை கைப்பற்ற பெருந்தொகை பணத்தை அரசியல்வாதிகள் செலவிட்டுள்ளார்கள். நினைவிருக்கிறதா? ஆடைகள், கடிகாரம், அரிசி என்று மக்களுக்கு கொடுத்தார்கள். அவர்களுடைய ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து அரசாங்கத்தை அமைத்தார்கள்.
ஆனால், முதல்முறையாக சூழ்ச்சிகள் செய்யாது, வெளிநாட்டு தலையீடு இல்லாது, பணத்தை பகிர்ந்தளிக்காது, ஊடக பலம் இல்லாது, அரச அதிகாரம் இல்லாது எமது குழு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.
எங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார்? இலட்சக்கணக்கில் அணிதிரண்ட மக்களே எமக்கு பக்கபலமாக இருந்தார்கள். எனவே, இந்த வெற்றியின் மதிப்பையும் கௌரவத்தையும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.” என்றார்.
