பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர்

474070900_929965765947792_6177443132427071331_n.jpg

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் தீருவில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

பிடியாணை உள்ளதாக கூறி அழைத்துச் சென்ற பொலிஸ்
குறித்த நபர் நேற்று 19. பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்றபோது அவருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்

அதன் பின்னர் இரவு குறித்த நபர் உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

இதனையடுத்து வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது பொலீஸாரின் தாக்குதலால் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேக வெளியிடப்பட்டுள்ளது

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *