ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு
பாலஸ்தீனத்தில் இருந்து விடுவிக்கப்படும் 33 பிணைக் கைதிகளின் பட்டியலை, ஹமாஸ் பகிர்ந்து கொள்ளாத வரையில் காசா போர் நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர்.
�
அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதல்களில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள்
�
இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர். இந்நிலையில், பிணைக் கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவு கூறியிருப்பதாவது: ஒப்புக் கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முன்னேற மாட்டோம். ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது. முழுப் பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
