உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க முயல்கிறது பாஜக அரசு என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியேற்ற, அமைச்சர் துரைமுருகன் இந்த
�
மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, இந்து என்.ராம், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.இந்நிலையில், திமுக சட்டத்துறை மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக அரசு அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க முயல்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
