இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து, முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி சமபந்தி விருந்து கொடுக்க தடையை மீறி வந்த
இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்கள் பிறகு கலைந்து சென்றனர்.சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானம்
கொண்டு வர கடிதம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சமபந்து விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்து இருந்தன. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மலை மீது யாரும் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
