எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை’ என த.வெ.க., பொதுச் செயலாளர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை’ என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. களத்தில்
தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த சூழலில், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை’ என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார். தமிழக வெற்றிக்
கழகத் தலைவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும். அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
