அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார் தொழில்நுட்ப தொழில்துறை அதிபர்களின் எழுச்சி ஆபத்தை ஏற்படுத்தலாம். ஜனநாயகம், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது’ என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் நியமனம் செய்து முடித்துவிட்டார். இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில், ஜோ பைடன் கூறியதாவது: எனக்கு மிகுந்த கவலை அளிக்கும் சில விஷயங்கள் குறித்து நான் நாட்டை எச்சரிக்கை விரும்புகிறேன். இது ஆபத்தான கவலை அளிக்க கூடிய விஷயம். அதீத செல்வம், அதிகாரம் கொண்ட சுயநலக்குழு உருவாகி வருகிறது.
ஜனநாயகம், சுதந்திரம் உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தொழில்நுட்ப தொழில்துறை அதிபர்களின் எழுச்சி ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் செல்வந்தர்களை தண்டிக்கவில்லை. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க்கை குறி வைத்து பைடன் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
