சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.

download-6-18.jpeg

சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2வது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது.

குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் கடந்த 2023ம் ஆண்டு 140 கோடியே 90 லட்சமாக இருந்த மக்கள்தொகை, இதில் 2024ம் ஆண்டில், 13 லட்சத்து 90 ஆயிரம் குறைந்துள்ளது..

2023ம் ஆண்டு சீனாவில் 90 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2024ம் ஆண்டில் 95 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2023ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.39 ஆக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2024ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 6.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சமாக இருந்தது. 2024ம் ஆண்டில் ஒரு கோடியே 93 லட்சமாக இருந்தது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *