பணி பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு

download-5-18.jpeg

ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் 2022ஆம் ஆண்டு பணி பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11.01.2025 அன்று திடீரென் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும். ஊடகங்கள் வாயிலாக அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளேயே எமது அக்காவை மீட்டுத் தருவதற்கு பேருதவியாக இருந்து செயற்பட்ட ஊடகங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த பெண்ணின் சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் குறித்து உரிய குடும்பத்தினர் வியாழக்கிழமை(16.01.2025) மாலை அவரது வீட்டில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்…

இந்நிலையில் தான் வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான வேதனத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார் மற்றைய வருடத்திற்குரிய வேதனம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை, என்னை அடித்து துன்புறுத்தினார்கள் மொட்டை மாயில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமகளை நான் அங்கு அனுபவித்தேன்.

எனவே நான் கடமை புரிந்த மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய வேதனத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓமான் நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து பல வேதனைகளை அனுவித்து விட்டு வீடு வந்து சேர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *