விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜேஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. சாலையில் ஆள்நடமாட்டம் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. குறிப்பாக, டில்லியின் பாலம் விமான நிலையம், பஞ்சாப்பின் அமிர்தரஸ் விமான நிலையம், உத்தரபிரதேசத்தின் வாரணாசி, ஆக்ரா மற்றும் லக்னோ விமான நிலங்களில் மிகவும் கடுமையான பனிமூட்டம்
இருந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக டில்லி ஐ.ஜி.ஐ., விமான நிலையத்தின் 217 விமானங்களின் சேவை தாமதமாகியுள்ளது.காலை 10 மணிக்கு வர இருந்த 149 விமானங்கள் 25 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.இது குறித்து டில்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பனி மூட்டத்தால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து தகவலை தெரிந்து கொள்ளலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
