கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு

download-17-5.jpeg

சந்தேக நபர்கள் நேற்று 15 மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர். கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ​ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்

கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *