6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களுரு ராமமூர்த்தி நகர் அருகே ஹொய்சாளா நகரில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திற்கு தொழிலாளியாக கடந்த சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்தக் கட்டடத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் 6 வயது சிறுமியொருவர் கட்டடத்தின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அபிஷேக் குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார் என சொல்லப்படுகிறது.
சிறுமியை தேடி வந்த அவரது தாய், நிகழ்விடத்தில் அபிஷேக் குமாரையும், தன் மகளின் நிலையையும் கண்டு, அபிஷேக் குமாரின் தலையில் அங்கிருந்த மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அந்த தாய். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கட்டடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், அபிஷேக் குமாரை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ராமமூர்த்தி நகர் போலீசார், அபிஷேக் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
