முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி

download-14-8.jpeg

வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.   மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு  15/01/2025  மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  உயிரிழந்த குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலை ஒன்றிலிருந்து சம்பவதினமான நேற்றிரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னாள் போராளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி சந்தேகநபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்பு பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *