எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் தகவல்ககாஸாவில் யுத்த நிறுத்தம் ஏற்படும் எனள் வெளியாகியுள்ளன
பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாசுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்கள் கத்தாரில் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் காஸாவில் யுத்த நிறுத்தம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் சுமார் 465 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த அகோர தாக்குதல்களினால் இதுவரை சுமார் 46 ஆயிரம் அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உடல் ஊனமுற்றவர்களாக மாறியுள்ளனர்.
