முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 18 இடங்களில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருவதாகவும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்து 500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளதாகவும், 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் பங்குபெறும் கிராமிய கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும், தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தவிர, கிராமியக் கலைஞர்களுக்கு தினசரி ஊதியத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு. க.ஸ்டா
லின் கூறியுள்ளார்.
