இருந்து இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவரும் அவரது மகளும் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு 45 வயதான ஆண் மற்றும் அவரது 21 வயது மகளை சுங்க இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சோதனையின் போது அவர்களின் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரத்து 875 ரூபா பெறுமதியான ரத்தினக் கற்களின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மொத்தமாக 689.5 கிராம் எடையுடைய மூன்ஸ்டோன்ஸ், ஹெஸ்சோனைட் கார்னெட்ஸ், ஸ்டார் சபையர்ஸ், கேட்ஸ் ஐஸ் மற்றும் எமரால்ட்ஸ் ஆகிய ரத்தினக் கற்களின் இருப்பு உள்ளடங்குவதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
