33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும்,

images-14.jpeg

24 மணிநேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என சபதம் எடுத்தார்.

மாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர், ‘நான் அதிபராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்’ என சபதம் எடுத்தார்.

தற்போது, அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையே, நான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும்’ என ஹமாஸ் படையினருக்கு அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், விரைவில் இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *